Posts

Showing posts from May, 2018

சேலம் மாவட்ட வரைபடம்

Image

சேலம் சிறப்பு

சேலம் சிறப்பு சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப் பகுதியில் நாகர்மலையும், மேற்குப் பகுதியில் காஞ்சனமலையும் அமைந்துள்ளது. சேலத்திற்கு மாம்பழ நகரம் என்ற பெயரும் உண்டு. இந்நகரில் லாரி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு, நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.வணிகத்துறையில் சிறந்து விளங்கும் சேலம் தமிழ்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் உயிர்நாடியாக விளங்குகிறது. புகழ்பெற்ற சேலம் உருக்காலை தற்போது தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சேலத்தில் சாயத்தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் உள்ளன. பரப்பளவு :  91.34 ச.கி.மீ மக்கள் தொகை : ...

சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மேட்டுர் அணைக்கட்டு தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில் இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 x164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்...

சேலம் மாவட்டத்தின் வரலாறு

சேலம் மாவட்டத்தின் வரலாறு தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம்  மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம்  நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.  மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா  என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில்  நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று...