சேலம் மாவட்டத்தின் வரலாறு
சேலம் மாவட்டத்தின் வரலாறு தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம். மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று...
Comments
Post a Comment